கடந்த பல வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வந்த இந்தியர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் கனடாவிற்கு குடிபெயர்ந்த நிலையில் வீதி விபத்தொன்றில் உயிரிழந்தார்.
நடைபயிற்சிக்காக கனடாவின் மிஸ்ஸிசாவுகா பகுதிக்கு சென்ற ஜஸ்ஜித் சிங் ஜாஜ் (வயது 73) என்பவரே விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உயிரிழப்பு டுபாய் வாழ் இந்தியர்கள் உட்பட ஏராளமானோரின் துயரில் ஆழ்த்தியுள்ளதாக டுபாய் இந்திய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆறு வழிச் சாலையை கடக்கும் போது பாரவூர்தியொன்று அவர் மீது மோதியுள்ளது.

படுகாயமடைந்த ஜாஜ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டுபாயிலுள்ள இந்திய சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வந்த ஜாஜ் பெரிய தரங்களை கொண்டிருந்த போதும், இந்தியர்களுகாக பல்வேறு நற்பணிகளை ஆற்றி வந்ததாக அவரது நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பாதையை கடப்பதற்காக பாதுகாப்பான பாதசாரிகள் கடவையை பயன்பாடுத்தாமையே விபத்துக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.