2024, ஜனவரி 1ஆம் திகதி முதல், கனடாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் வாரம் ஒன்றிற்கு 20 மணி நேரம் வரைதான் வேலை செய்ய அனுமதி என இப்போதுதான் ஒரு தகவல் வெளியானது.
தற்போது, அதற்குள் இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை வைத்துள்ளதைக் காட்டவேண்டும் என ஒரு விதி உள்ளது.
அந்த தொகை தற்போது கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அது தொடர்பாக கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான மார்க் மில்லர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 2024, ஜனவரி 1 முதல், சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டிய தொகை, 10,000 கனேடிய டொலர்களிலிருந்து 20,635 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்கள் நலனின் அதீத அக்கறை கொண்டுள்ள மார்க் மில்லர், மாணவர்கள் கனடாவில் பணக்கஷ்டத்தை அனுபவிக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்!