கனடிய மத்திய அரசாங்கத்தின் வரவு செலுவுத் திட்டப் பற்றாக்குறை 40.1 பில்லியன் டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எதிர்வுகூறப்பட்ட தொகையை விடவும் பற்றாக்குறை தொகை 10 பில்லியன் டொலர்களினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் கிறிஸ்டியா பிரிலாண்ட் நேற்றைய தினம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் 491 பில்லியன் டொலர் பெறுதியான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
பற்சுகாதாரததிற்கு கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மையான சக்தி வளத் திட்டங்களுக்கு அதிகளவில் முதலீடு செய்யவும் வரிச் சலுகை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் காரணமாக அரசாங்கத்தின் வருமானம் 5.7 பில்லியன் டொலர்களினால் வீழ்ச்சியடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செல்வந்தர்கள் மற்றும் பெரு நிறுவனங்களின் வரியை அதிகரிப்பதன் மூலமும் அரசாங்க செலவுகளை குறைத்தும், பாதீட்டு பற்றாக்குறை தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கான மானியங்களை 40 வீதத்தினால் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.