வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் யோசனை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லிபரல் அரசாங்கத்தினால் நாளைய தினம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு அரசாங்கம் நிவாரணங்களை வழங்க உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மளிகைப் பொருட்களுக்காக இவ்வாறு அரசாங்கம் கொடுப்பனவு தொகையொன்றை வழங்க உள்ளது.
அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் கீழ் 11 மில்லியன் மக்கள் நன்மை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு 467 டொலர்களும், சிரேஸ்ட பிரஜைகளுக்கு 225 டொலர்களும், தனி நபர்களுக்கு 234 டொலர்களும் வழங்கப்பட உள்ளது.
ஒரு தடவை கொடுப்பனவாக (one-time payment) இவ்வாறு அரசாங்கம் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு கொடுப்பனவு வழங்க உள்ளது.
பிரதி பிரதமரும், நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ப்ரீலாண்ட் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க உள்ளார்.