இலங்கை அரசியல்வாதியான , தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம்(21) கனடாவுக்கு வந்துள்ளார்.
நாளை மற்றும் நாளைமறுதினம் (23, 24) கனடாவின் ரொறொன்ரோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கனடாவிற்கு வந்த அநுரக்கு ரொறன்ரோ விமான நிலையத்தில் கனடாவாழ் இலங்கையர்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார கனடா வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.