Reading Time: < 1 minute

கனடாவின் யோர்க் பிராந்தியதத்தில் மிதமிஞ்சிய அளவில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒழுங்குபடுத்தப்படாத போதைப்பொருட்கள் (unregulated drugs) மிகவும் ஆபத்தானவை மற்றும் உயிருக்கு கேடு விளைவிக்கும் என்று மக்களை எச்சரித்துள்ளனர்.

கடந்த மாதம் யோர்க் பிராந்தியத்தில் 44 வயதான பெண், 35 வயதான ஆண் மற்றும் 22 வயதான ஆண் என மூன்று பேர் மிதமிஞ்சிய அளவில் போதை மருந்து உட்கொண்டு உயிரிழந்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் போதை மருந்து பயன்படுத்தப்படுவதனால் இவ்வாறான மரணங்கள் சம்பவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோத போதை மருந்துகளில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்கள் என்ன என்பது தெரியாத காரணத்தினால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் மிக மோசமானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.