கனடாவின் மொன்றியலில் ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொலை மற்றும் தற்கொலைச் சம்பவமாக இது அமைந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மொன்றியல் நகரின் கிழக்கு பகுதியின் நொட்ரே டேம் அவன்யூ பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இருவரும் 45 வயதினை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தீ விபத்துக்குள்ளான நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மொன்றியல் நகரில் இடம்பெற்ற 40ம் படுகொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த இருவருக்கும் இடையிலான தொடர்பு என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.