கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும்.
ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் டிரக்ஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர்.
ஜனவரி 20 ஆம் திகதி என்னுடைய முதல் நிர்வாக உத்தரவில் மெக்சிகோ, கனடா பொருட்களுக்கு 20 சதவீதம் வரிவிதிப்பு. அத்துடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.
இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் இண்டும் நிறுத்தப்படும் வரை இந்த வரி விதிப்பு நீடிக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.