கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதில் முகக்கவசங்களின் செயற்திறனைப் பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கட்டாய முகக்கவசக் கொள்கைகளை தீர்மானிக்கும் பேரணிகள் பல கனேடிய நகரங்களில் நடைபெற்றன.
வன்கூவர், கல்கரி, சாஸ்கடூன், வின்னிபெக் மற்றும் ஒட்டாவா உள்ளிட்ட நகரங்களில் கூடியிருந்த இந்த பேரணிகள் நடைபெற்றன.
பல மாகாணங்களில் கொவிட்-19 தொற்றுகள் மீண்டும் அதிகரிக்க கூடுமென்ற அச்சம் எழுந்துள்ள போதும், எதிர்ப்பாளர்கள் இதற்கு அழைப்பு விடுத்தனர்.
முகக்கவசம் அணியாமைக்கான பேரணி ‘மார்ச் டு அன்மாஸ்க்’ இயக்கத்திற்கு ஆதரவாக, பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது தன்னார்வமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தப்படக்கூடாது என்று பேரணியில் கலந்துக் கொண்டவர்கள் வாதிடுகின்றனர்.
தொற்று நோயிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுவதையும் அச்சத்தின் அடிப்படையிலான கொள்கைகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதாகப் பேரணி அமைப்பாளர்கள் கூறினர்.