Reading Time: < 1 minute
கனடாவின் வடக்கு மானிடோபவின் ஓ பிபோன் நா பிவின் பகுதியில் வன்முறைகள் காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக இடம்பெற்று வந்த தொடர் வன்முறைச் சம்பவங்களினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கத்தி குத்து தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மதுபானம் அருந்தியதனால் பதிவான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
வன்முறைகள் மற்றும் தாக்குதல்களினால் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வன்முறைச் சம்பவங்களினால் குறித்த பகுதியை முடக்குவதாக நகர நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
போதைப் பொருளுக்கு அடிமையாதலினால் அதிகளவு வன்முறைகள் பதிவாகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.