மாண்ட்ரியாலின் ஓஷேலாகா (Hochelaga) பகுதியில் உள்ள ஒரு வாகனத் திருத்துமிடத்தில் ஏற்பட்ட ” பாரிய தீவிபத்து” தொடர்பாக, நான்கு சிறார்களும் ஒரு 18 வயது இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தீவைத்தல் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று மான்ட்ரியால் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 1 மணியளவில், லகோர்டைர் (Lacordaire) தெருவில் ஓஷேலாகா தெருவிற்கு அருகே உள்ள ஒரு வாகனத் திருத்துமிடத்தில் தீப்பற்றியதற்கான 911 அவசர அழைப்பு கிடைத்தது.
தீவிபத்து காரணமாக சுமார் 10 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் வாகனத் திருத்துமிடத்தில் தீ விரைவாக பரவ செய்யக்கூடிய பொருட்கள் (accelerant) இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் ஞாயிறு காலை வரை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.