Reading Time: < 1 minute

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் குறைத்து மதிப்பீடு செய்யப்படுவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கியூபெக், ஒன்றாரியோ, மானிடோபா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கியிலான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் பதிவாகி வரும் எண்ணிக்கையை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் கொரோனா நோய்த் தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுமுறைக் காலத்தில் பாரிய ஒன்றுகூடல்களை மக்கள் முடிந்தளவு தவிர்த்துக் கொள்வது பொருத்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக் மாகாணத்தில் நேற்றைய தினம் பத்தாயிரம் நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.