கனடாவின் மத்திய வங்கி வரலாற்றில் முதல் தடவையாக பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
மத்திய வங்கி நிறுவப்பட்டு 87 ஆண்டுகளில் முதல் தடவையாக நட்டமடைந்துள்ளது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் மத்திய வங்கி 522 மில்லியன் டொலர்கள் நட்டமடைந்துள்ளது.
மத்திய வங்கியின் காலாண்டுகளுக்கான அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி வீதம் குறித்த கொள்கைகளினால் இவ்வாறு நட்டமடைந்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி அண்மைய மாதங்களில் தொடர்ச்சியாக வட்டி வீதத்தை உயர்த்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகவே மத்திய வங்கி வரலாற்றில் முதல் தடவையாக நட்டமடைந்துள்ளது.
பெருந்தொற்று காலத்தில் மத்திய வங்கி தனது சொத்துக்களை விஸ்தரித்து கொண்டமையும் இந்த பின்னடைவிற்கான ஏதுவாக அமைந்துள்ளது.
எவ்வாறெனினும, கனேடிய மத்திய வங்கி மீண்டும் லாபமீட்டும் என அதன் ஆளுனர் ரிப் மெக்கலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.