கனடாவில் தனியார் பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய அதிபர் ஒருவர் ஆபாச படங்களை சிறுவன் ஒருவனுக்கு அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் நானாஈமோ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வந்த ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய அதிபருக்கு 15 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிபர் 15 வயதான சிறுவன் ஒருவனுக்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்தார் என குற்றம் சுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Aspengrove என்ற பாடசாலை ஒன்றில் அதிபராக கடமை ஆற்றிய மாக் லோயஸ் பிரியோட்டி என்பவருக்கு எதிராகவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் குறித்த அதிபர் இன்னும் ஒரு நபரை தொடர்பு கொண்டு இவ்வாறு ஆபாசமான படங்களை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த சிறுவன் டேட்டிங் செயலியை பயன்படுத்துவதற்காக தனக்கு 21 வயது என பொய்யுரைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
எனினும் தொடர்பு பேணிய அதிபரிடம் தமக்கு இன்னும் 16 வயது நிரம்பவில்லை என தெரிவித்துள்ளார்.
15 வயது சிறுவன் ஒருவனுடன் பாலியல் ரீதியான தொடர்பு சட்டவிரோதமானது என்பது குறித்த அதிபருக்கு தெரியும் எனவும் இதனால் அவரை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.