Reading Time: < 1 minute

கனடா – பிராம்ப்டனில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் பீல் பிராந்திய பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்த கண்காணிப்பு கெமரா காணொளி வெளியாகியுள்ளது. இந்த வன்முறை சம்பவம் டிசம்பர் 1, 2022 அன்று, ஹிக்கின்ஸ் கிரசண்ட் மற்றும் பார்க்சைட் டிரைவ் பகுதியில் ஒரு பெண் நடந்து கொண்டிருந்தபோது மாலை 6:30 மணியளவில் நடந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு வீட்டிற்கு வெளியே இருந்து கண்காணிப்பு கெமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஒரு ஆண் என்று உறுதிசெய்யப்பட்ட ஒரு உருவம், பின்னால் இருந்து அந்த பெண்ணை நெருங்குவதைக் காணொளி காட்டுகிறது.

பின்னர் பெண்ணின் தலையில் ஒரு பையை வைத்து வலுக்கட்டாயமாக தாக்க இந்த நபர் முயற்சிக்கினார். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு, குறித்த நபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் செல்கின்றார்.

அந்த பெண்ணுக்கு எந்தவிதமான உடல் உபாதைகளும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். சந்தேக நபர் தோராயமாக 6-அடி-1 என விவரிக்கப்பட்டுள்ளதுடன் கடைசியாக வெளிர் நிற ஹூடி மற்றும் அடர் ஸ்வெட் பேண்ட் அணிந்திருந்தார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.