Reading Time: < 1 minute

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக கோரிக்கை வலுத்துவருகிறது. எதிர்க்கட்சிகள், மக்கள் மட்டுமின்றி, அவர் சார்ந்த கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது.

ஆனால், அடுத்த தேர்தலுக்குள் கட்சியை தான்தான் வழிநடத்துவேன் என அடம்பிடிக்கிறார் ட்ரூடோ.

ஆகவே, ட்ரூடோ கட்சித் தலைமையில் நீடிப்பாரா அல்லது பதவி விலகுவாரா என்பதை அறிவதற்காக, அவருக்கு எப்படி அழுத்தம் கொடுப்பது என்பது குறித்து விவாதிக்க, ட்ரூடோ சார்ந்த லிபரல் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்திக்கிறார்கள்.

ட்ரூடோவை பதவியிலிருந்து அகற்றிவிட்டு அவருக்கு பதிலாக வேறு யாரையாவது தலைமைப் பதவியில் அமர்த்துவதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்தும் இன்று அவர்கள் விவாதிக்க இருக்கிறார்கள்.

இந்த விடயத்தை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் அந்த விடயம் குறித்து பேசும் அதிகாரம் தங்களுக்கு இல்லாததால், தங்கள் பெயரை வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்கள்.