கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தி வெளியான நிலையில், தற்போது மனைவியான சோபி கிரேகோயரோவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் இருக்கும் முக்கிய தலைவர்களையும் தாக்கி வருகிறது. குறிப்பாக ஈரானில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர். அதே போன்று பிரித்தானியாவின் சுகாதார துறை அமைச்சரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கனடா பிரதமர் மனைவி Sophie Gregoire Trudeau பிரித்தானியாவிற்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பிய நிலையில் அவர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் காரணமாக பிரதமர் Justin Trudeau-வும் அவருடன் சேர்ந்து தனிமைப்படுத்தப்பட்டார்.
கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும், அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும், இருப்பினும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Sophie Gregoire-Trudeau-வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரின் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.