கனடாவை நோக்கி பெரும் எண்ணிக்கையிலான உக்ரைன் ஏதிலிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறிப்பாக கனடாவின் வானகூவார் பகுதியில் இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான உக்ரைன் பிரஜைகள் சரணாகதி அடைந்து வருகின்றனர்.
போரின் தாக்கம் காரணமாக 951 உக்ரைன் பிரஜைகள் கனடாவின் வான்கூவரில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
கூடுதல் அளவில் ஏதிலிகள் வான்கூவாரில் படையெடுப்பதன் காரணமாக அவர்களை தங்க வைப்பதற்கு போதியளவு வசதிகள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் வரையில் வாரமொன்றுக்கு 10 ஏதிலிகள் வான்மகூவார் தீவுகளுக்கு வருகை தந்துள்ளனர்,
எனினும் தற்பொழுது வாரமொன்றுக்கு 62 என்ற சராசரியில் ஏதிலிகள் கனடாவை நோக்கி அடைக்கலம் பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏதிலிகள் வீட்டு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.