கனடாவில், ‘ஸ்ரார் வார்ஸ்’ விண்கலத்தை போன்ற தலையுடன் கூடிய பழங்கால கடல் உயிரினத்தின் நூற்றுக்கணக்கான புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கனடாவில் உள்ள கூட்டெனே தேசிய பூங்கா பாறைகளில் இந்த அரிய புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கம்ப்ரோரஸ்ரர் ஃபல்கேற்ரஸ்’ (Cambroraster Falcatus) என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் இன்றைய ‘ஆர்த்ரோபாட்’ வகை விலங்குகளின் குடும்பத்தை சார்ந்தது என்றும், அவை 506 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ‘கம்ப்ரியன் காலகட்டத்தில்’ வாழ்ந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த விலங்குக்கு ‘ஸ்ரார் வோர்ஸ்’ விண்கலத்தை போன்ற தலையும், சிறிய அளவிலான உடலும் இருந்திருக்கலாம் எனவும், மேல்நோக்கி இருக்கும் கண்கள் கொண்ட இந்த உயிரினம் சேற்றில் இருக்கும் புழுக்கள், மீன்களை உண்டு வாழ்ந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.