Reading Time: < 1 minute
கனேடிய நாடாளுமன்றம், மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அறிவிக்கும் பிரேரணையை, நேற்று ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
அதைத் தொடர்ந்து ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்ட கனேடிய பாதுகாப்புத்துறை அமைச்சரான அனிதா ஆனந்த், ஒரு தமிழ் கனேடியர் என்ற முறையில், கனடா நாடாளுமன்றம், மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக அங்கீகரித்ததற்காக தான் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.