கனடா குற்றவாளிகளை வரவேற்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்டிப் சிங் நிஜார் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனடா குற்றவாளிகளுக்கு அடைக்கலம் வழங்குவதாக இந்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டை பிளவுபடுத்தும் சீக்கியர்களின் முயற்சிகளுக்கு கனடா ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் லிபரல் அரசாங்கம் வாக்குகளுக்காக சீக்கிய பிரிவிணைவாத செயற்பாடுகளை ஊக்குவித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் இவ்வாறான குற்றச் செயல்களுக்கு உடந்தையாக கனடா செயற்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு கனடா அடைக்கலம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.