Reading Time: < 1 minute

கியூபெக் மாகாணத்தில் இரவு 10 மணி முதல் அமுலுக்கு வந்துள்ள ஊரடங்கு உத்தரவானது திங்கட்கிழமை முதல் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், எதிர்வரும் நாட்களில் இரவு நேரங்களிலும் உணவகங்கள் திறந்து செயல்பட வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார் மாகாண முதல்வர்.

ஓமிக்ரான் பரவல் உச்சத்தை தொட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள மாகாண முதல்வர் Francois Legault, நாம் இதுவரை முன்னெடுத்த கட்டுப்பாடுகள் அதன் பலனை அடைந்துள்ளது என்பது இதனால் தெரிய வருகிறது என்றார்.

கியூபெக் மாகாணத்தில் கடந்த டிசம்பர் 31ம் திகதி முதல் இரவு 10 மணியில் இருந்து 5 மணி வரையில் ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

மட்டுமின்றி, உணவகங்கள், மதுபான விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் உட்பட மூடப்பட்டன. தற்போது ஜனவரி 17ம் திகதி முதல் இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதால், இனி மேல் உணவகங்கள், மற்றும் தொடர்புடையவை திறந்து செயல்படும் என்றே நம்பப்படுகிறது.