கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இன்றைய தினம் தேர்தல் நடைபெறுகின்றது.
மாகாண அரசாங்கத்தை தெரிவு செய்யும் நோக்கில் இன்றைய தினம் கியூபெக் மாகாண மக்கள் வாக்களிக்க உள்ளனர்.
கடந்த ஐந்து வாரங்களாக மாகாண அரசியல்வாதிகள் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் காலை 9:30 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தல் நடைபெறும் இன்றைய தினம் மாகாணத்தில் தொழில்களில் ஈடுபட்டு வரும் முழு நேர அல்லது பகுதி நேர பணியாளர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்காக நான்கு மணித்தியால விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பள குறைப்பு எதனையும் செய்யாது தொழில் தருனர்கள், வாக்களிப்பில் ஈடுபடுவதற்கு தமது பணியாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்காக செல்லும் வாக்காளர்கள் ஆள் அடையாளத்தை உறுதி செய்யக்கூடிய ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
இதேவேளை, தற்போதைய முதல்வர் பிரான்கோயிஸ் லகுலாட் இம்முறை தேர்தலிலும் வெற்றியீட்டுவார் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.