கனடாவின் கல்கரி பகுதியில் விமான பயண கட்டணங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆலங்கட்டி மழை காரணமாக விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
பெரிய கொல்ப் பந்து அளவில் பெரிய பனிக்கட்டிகள் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் விமானங்கள் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சில நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள் இந்த ஆலங்கட்டி மழையினால் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனம் கடந்த திங்கள் முதல் புதன்கிழமை வரையிலான காலப்பகுதியில் சுமார் 248 விமான பயணங்களை ரத்து செய்துள்ளனர்.
மையமாகக் கொண்டு இயங்கி வரும் விமான சேவை நிறுவனங்கள் மேலும் 106 விமான பயணங்களை ரத்து செய்துள்ளனர்.
இவ்வாறு அதிக அளவில் விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் விமான பயண கட்டணங்கள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வரையறுக்கப்பட்ட விமான டிக்கெட்டுகள் காணப்படுவதனால் அதற்கான கிராக்கி அதிகரிக்கும் எனவும் இதன் மூலம் விமான பயண கட்டணங்கள் உயர்வடையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சீறற்ற காலநிலை காரணமாக இவ்வாறு அதிகளவு விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.