Reading Time: < 1 minute

கனடாவின் ஓக்வில் நகர மைய பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் 40 வயதான ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹால்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலையில், மாலை 5:30 மணியளவில் லேக்ஷோர் ரோடு ஈஸ்ட் (Lakeshore Road East) அருகே உள்ள கட்டிடமொன்றில் ஒரு நபர் இறந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த மரணத்தை சந்தேகத்திற்கிடமானதாக போலீசார் கருதுவதாக சம்பவ இடத்தில் பேசிய கான்ஸ்டபிள் ரியான் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இறப்புக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சடலத்தைக் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்த நபர், மரணித்தவரை முன்பே அறிந்தவர் எனவும், அவர்கள் எப்படி தொடர்புடையவர்கள் என்பதற்கான கூடுதல் தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை எனவும் ஆண்டர்சன் தெரிவித்தார்.

போலீசார், அந்த பகுதி வழியாக காலை 11 மணி முதல் மாலை 5:30 மணி வரை சென்றவர்களுக்கு, குறிப்பாக டாஷ்கேம் (Dashcam) வீடியோ உள்ளவர்களுக்கு, உடனடியாக தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.