கனடாவில் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக மின்சாரக் கட்டணத்தை அறவீடு செய்த நிறுவனம் அதனை மீளச் செலுத்த தீர்மானித்துள்ளது.
ஒன்றாரியோ சக்திவள நிறுவனமான Elexicon Energy Inc என்ற நிறுவனம் இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு மீள பணத்தை செலுத்த உள்ளது.
வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதலாக அறவீடு செய்யப்பட்ட 2.6 மில்லியன் டொலர்களை இவ்வாறு மீளச் செலுத்த தீர்மானித்துள்ளது.
டர்ஹம் பிராந்தியத்தைச் சேர்ந்த 173000 வாடிக்கையாளர்களிடம் இவ்வாறு கூடுதலாக அறவீடு செய்யப்பட்ட கட்டணம் மீளச் செலுத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பம் வரையில் இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகை கட்டணங்களை அறவீடு செய்துள்ளதாக நிறுவனம் எழுத்து மூலம் ஒப்புக் கொண்டுள்ளது.
கட்டணப் பட்டியல் அறவீடு செய்யும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு கூடுதல் கட்டணம் அறவீடு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 90 நாட்களுக்குள் கூடுதலாக அறவீடு செய்யப்பட்ட தொகை ஒரே தடவையில் வாடிக்கையாளர்களின் மின் பட்டியல் ஊடாக மீளச் செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண அறவீட்டு முறைமை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றாரியோ சக்திவளச் சபை உறுதி செய்துள்ளது.