Reading Time: < 1 minute
கனடாவின் ஒட்டாவாவில் கோவிட் நோயாளிகளின் வைத்தியசாலை அனுமதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
குறித்த பகுதியில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒட்டாவாவின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் வீரா எட்சஸ்இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தக் காலப் பகுதியை விடவும் இந்த ஆண்டில் தொற்றாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
கழிவு நீர் பரிசோதனைகளின் மூலம் தொற்று பரவுகை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் நோய்த் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படலாம் எனவும் இதனால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.