Reading Time: < 1 minute

கனடாவில் ஆப்பிள் ஐபோன்களை கடைக்குள் புகுந்து திருடிய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஒட்டவா பொலிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டிசம்பரின் பிற்பகுதியில் பேஷோர் ஷாப்பிங் சென்டர் வணிகத்திலிருந்து பல ஸ்மார்ட்போன்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விசாரணையில் இருவரை அடையாளம் காண பொதுமக்கள் உதவியைக் கோருகிறோம்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் வாடிக்கையாளர்களாக தங்களை காட்டிக் கொண்டு கடைக்குள் நுழைந்து பல ஆப்பிள் ஐபோன்களைத் திருடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் கண்ணாடி, கருப்பு கோட், கருப்பு சட்டை, நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார். மற்றொருவர் கருப்பு கோட், கருப்பு சட்டை மற்றும் பேன்ட் அணிந்திருந்தார்.

இரு சந்தேக நபர்களும் கருமையான முடி மற்றும் தாடியுடன் இருந்தனர். வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள், ஒட்டாவா பொலிஸ் சர்வீஸ் மேற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.