Reading Time: < 1 minute

கனடா அமெரிக்க எல்லையில் இந்தியர்கள், கனேடிய குடியுரிமை கொண்டவர்கள் உட்பட எட்டு பேர் பலியானபின்னும், சட்ட விரோதமாக எல்லை கடப்பது குறைந்தபாடில்லை.

30.3.2023 அன்று, பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்‌ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) என்னும் இந்தியர்கள், மற்றும், ரோமேனிய வம்சாவளியினரான Florin Iordache (28), Cristina (Monalisa) Zenaida Iordache (28), அவர்களுடைய குழந்தைகள் இருவர், என எட்டு பேர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக மீட்கப்பட்டார்கள்.

வழக்கமாக எல்லை கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் Roxham Road பகுதி மூடப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் வேறு வழிகளை பயன்படுத்தக்கூடும், அதனால், உயிரிழப்புகள் நேரிடலாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்திருந்தனர். அதுபோலவே உயிரிழப்புகள் ஏற்பட்டதால் அதிர்ச்சி உருவாகியுள்ளது.

US Border Patrol

இப்போது புலம்பெயர்வோர் எல்லை கடக்க வேறு வழிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

கியூபெக்குக்கும் நியூயார்க்குக்கும் இடையிலுள்ள Swanton Sector என்னும் இடம் வழியாக மக்கள் எல்லை கடக்கத் துவங்கியுள்ளார்கள் என அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

சட்ட விரோதமாக எல்லை கடக்கும் நபர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள கனேடிய பொலிசாரும், விசிட்டர் விசாக்கள் பெற்று, விமானம் மூலம் கனடாவின் ரொரன்றோ அல்லது மொன்றியலுக்கு வரும் மக்கள், எல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயல்வதாக தெரிவித்துள்ளார்கள்.

ஆக, புதிதாக கொண்டு வரப்பட்ட ஒப்பந்தமோ கட்டுப்பாடுகளோ, சட்ட விரோத எல்லை கடத்தலை நிறுத்தமுடியவில்லை என்பது மட்டும் உண்மை.