கனேடியர்களுக்காக அமெரிக்கா தொடர்ந்தும் எல்லையை மூடி வைத்திருப்பது ஏன்? என்பது குறித்து ஜோ பைடன் நிர்வாகம் விளக்க வேண்டும் என அமெரிக்காவின் 9 மாகாணங்களின் ஆளுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொது சுகாதாரத் தரவுகள், அறிவியல் ஆலோசனைகள் மற்றும் எங்கள் நிபுணர்களின் ஆலோசனைகள் சரியான நேரத்தில் பொறுப்புடன் எல்லையை மீண்டும் திறக்கும் திட்டத்தை ஆதரிக்கின்றன என்பதே ஆளுநர்களாகிய எங்களது வலுவான கருத்தாகும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் மற்றும் இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் ஆகியோருக்கு எழுதிய கடித்தில் ஆளுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் மாகாண அளுநர்கள் மற்றும் கனேடிய மாகாண அரசாங்கங்களுடன் ஒன்றிணைந்து வெளிப்படையான திட்டங்களை பைடன் நிர்துவாகம் வகுக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தியுள்ளர்.
ஆகஸ்ட் 9 முதல் அமெரிக்காவுடனான எல்லை திறக்கப்பட்டு முழு தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ட்ரூடோ அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.
கனடாவில் தொற்று நோய் நெருக்கடி குறைந்து, மருத்துவமனைச் சோ்க்கைகளும் வீழ்ச்சியடைந்து வருவதை அடுத்து எல்லையை மீளத் திறக்கும் அறிவிப்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டார்.
எனினும் கனடாவின் இந்த அறிவிப்பு வெளியான சில ஓரிரு நாட்களுக்குப் பின்னர் கனடாவுடனான எல்லை மூடல் அறிவிப்பை பைடன் நிர்வாகம் ஆகஸ்ட் 21 வரை நீடித்ததது.
இந்நிலையில் இந்த முடிவு அரிக்கா மற்றும் கனடாவில் நீண்ட காலம் பிரிந்திருக்கும் உறவுகளிடையே ஏமாற்றத்தை அளித்தது.இந்நிலையில் எல்லைப் பகுதி மக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சட்டவாக்க சபையினர் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தொற்றுநோயை அடுத்து 2020 மார்ச் முதல் அமெரிக்கா – கனடா எல்லைகள் இரு நாடுகளாலும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கனடா தனது எல்லையைத் திறக்கும் முடிவை அறிவித்துள்ளபோதும், அமெரிக்கா தொடர்ந்தும் கனடாவுடனான எல்லை மூடல் காலத்தை நீடித்திருப்பது குறித்து கவலைகள் வெளியிடப்பட்டுள்ளன.