கனடாவின் எட்மோன்டன் நகரில் வாகனங்களின் சத்தம் பெரிதாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
பெரும் சத்தத்துடன் வீதியில் செலுத்தப்படும் வாகனங்கள் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும் இதற்காக சட்டமொன்று நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எட்மோன்டன் நகரசபையின் உறுப்பினர் மைக்கல் ஜான்ஸ் இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.
தற்பொழுது அதிக சத்தத்துடன் செலுத்தப்படும் வாகனங்களின் சாரதிகளுக்கு 250 டொலர்கள் அபராதம் விதிக்கப்படுகின்றது.
எனினும் இந்த அபராதத் தொகையை 1000 டொலர்களாக உயர்த்தப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச் செயலை ஒரு தடவைக்கு மேல் செய்தால் அபராத தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டத் திருத்தம் அமுல்படுத்தப்பட்டால் அதிக சத்தமாக வாகனங்களை செலுத்தும் நபர்கள் கூடுதல் தொகை அபராதத்தை செலுத்த நேரிடும் என்பது குறிபபிடத்தக்கது.