கனடாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவை அடுத்த 100 ஆண்டுகளுக்கு வலுப்படுத்தும் புதிய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கனடிய பிரதமர் Mark Carney மற்றும் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy கையெழுத்திட்டுள்ளனர்.
உக்ரைன் அதிபர் Zelenskyy-யின் கனடாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, Calgary நகரில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
“100-Year Partnership” என அழைக்கப்படும் இந்த புதிய கூட்டாண்மை, கனடா–உக்ரைன் உறவை மேலும் விரிவுபடுத்தி ஒரு நீண்டகால Strategic Partnership ஆக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், உக்ரைனின் மீள்கட்டமைப்பு மற்றும் இரு நாடுகளின் மக்களுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த கூட்டாண்மையின் கீழ் முன்னுரிமை பெறுகின்றன.
பாதுகாப்பு ஒத்துழைப்பும் அதிகரிப்பு
இதனுடன், பாதுகாப்பு மற்றும் Security Cooperation தொடர்பான மற்றுமொரு முக்கிய பிரகடனத்திலும் கனடா மற்றும் உக்ரைன் கையெழுத்திட்டுள்ளன.
குறிப்பாக Drone தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவுள்ளன.
கனடிய இராணுவம் மற்றும் Coast Guard அமைப்புகளுக்குத் தேவையான drones-ஐ விரைவாக கொள்வனவு செய்வதற்காக புதிய தேசிய Drone Marketplace ஒன்றை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மில்லியன் கணக்கான drones தயாரிக்கக்கூடிய தொழிற்சாலைகள், supply chains மற்றும் உற்பத்தித் திறனை கனடாவில் உருவாக்குவதே அரசின் இலக்கு என பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் போர்க்கள அனுபவத்துடன் கனடிய தொழில்நுட்பம்
உக்ரைனின் போர்க்கள அனுபவத்தையும், கனடாவின் manufacturing, software மற்றும் Artificial Intelligence தொழில்நுட்ப திறன்களையும் இணைத்து புதிய drones மற்றும் counter-drone systems உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக குறைந்த செலவில் அதிகளவிலான interceptor systems உருவாக்கும் உக்ரைனின் Project Freya திட்டத்திற்கும் கனடா ஆதரவு வழங்கவுள்ளது.
2022ஆம் ஆண்டு ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பு ஆரம்பித்ததிலிருந்து, கனடா உக்ரைனுக்கு 8.5 பில்லியன் டொலருக்கும் அதிகமான இராணுவ உதவியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தங்களின் மூலம், கனடா–உக்ரைன் உறவு பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் புதிய தொழில்நுட்ப ஒத்துழைப்பில் அடுத்த முக்கிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.