ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பொன்றில் முதல் தடiவாயக கனடா, இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரி, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு கனடிய அரசாங்கம் ஆதரவாக வாக்களித்துள்ளது. போர் நிறுத்தத்தை ஆதரிக்கும் வகையில் கனடா வாக்களித்தமை யூத தரப்புக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நீண்ட காலமாக இஸ்ரேலுடன் நட்புறவு பாராட்டி வரும் கனடா, பலஸ்தீன எதிர்ப்பு கொள்கைகளையே மறைமுகமாக பின்பற்றி வருகின்றது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் போர் நிறுத்தம் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு கனடா முதல் தடவையாக ஆதரவாக வாக்களித்துள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 153 நாடுகளும், எதிராக 10 நாடுகளும் வாக்களித்ததுடன், 23 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.