கனடா இந்தியாவுக்கிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க அமெரிக்க ஜனாதிபதியாகிய ட்ரம்ப் உதவுவார் என இந்திய வம்சாவளி தலைவர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அமெரிக்க சமுதாயத்தின் முன்னணி தலைவரான சுதிர் பாரிக் என்பவர், 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்புக்கு இந்திய அமெரிக்க சமுதாயத்தின் ஆதரவு குறித்து பேசிய சுதிர், கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க கனடா உதவ முடியும் என்பது குறித்தும் பேசியுள்ளார்.
சமீபத்தில் கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து தாங்கள் ட்ரம்புடன் விவாதித்ததாகவும், தான் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டால் கனடா அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்த்துவைக்க உதவுவதாக அவர் தெரிவித்ததாகவும் சுதிர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில், வர்த்தகம், கலாச்சாரப் பரிமாற்றம், மாணவர் பரிமாற்றம், இரு நாடுகளிலும் மற்ற நாட்டவர்கள் வாழ்தல் என முக்கிய விடயங்கள் உள்ளன என்பதால், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சினைகள் தூதரக ரீதியில்தான் தீர்த்துவைக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.