கனடாஅல்பர்ட்டாவின் எட்மோன்டனில் அமைந்துள்ள புதிய காணி ஒன்றை கொள்வனவு செய்த தம்பதியினருக்கு அரிய பொருள் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த தம்பதியினருக்கு தங்களது காணியில் பாரியளவிலான டைனோசர் ஒன்றின் எலும்பு கிடைத்துள்ளது.
லெடொக் கவுனியில் அமைந்துள்ள இந்த காணி 150 ஏக்கர் பரப்பினைக் கொண்டந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காணியை சுற்றிப் பார்த்த போது நபர் ஒருவருக்கு இந்த அரிய பொக்கிஷம் கிடைக்கப் பெற்றுள்ளது.
பெரிதாக இருக்கின்றது என்பதற்காக அதனை டைனோசர் எலும்பு எனக் கூறிவிட முடியாது என்பதனால் உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சித்ததாக தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
அல்பர்ட்டாவின் றோயல் டைரில் அருங்காட்சியகத்திற்கு எலும்பின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்த ஆய்வாளர்கள் இது ஓர் டைனோசர் எலும்பு என உறுதி செய்துள்ளதுடன், அதனை நேரில் ஆய்வு செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளனர்.
உலகில் மிக அதிகளவில் டைனோசர் புதைபொருட்கள் காணப்படும் பகுதியாக கனடா அல்பர்ட்டா மாகாணம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.