புலம்பெயர்தல் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறையும் என்று கூறியுள்ளது கனடா அரசு.
ஆனால், உண்மையில், புலம்பெயர்வோர் எண்ணிக்கை கனடா அரசு வெளியிட்ட எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் என மாறுபட்ட கருத்தொன்றை வெளியிட்டுள்ளது கனடா வங்கி.
மார்ச் மாதம் 21ஆம் திகதி, கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் (non-permanent residents or NPRs) எண்ணிக்கையை, மக்கள்தொகையில் 6.2 சதவிகிதத்திலிருந்து, 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாக, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (Immigration, Refugees and Citizenship Canada or IRCC) அறிவித்திருந்தது.
ஆனால், அரசின் கருத்துக்கு மாறாக, வித்தியாசமான கருத்தொன்றை தெரிவித்துள்ளது கனடா வங்கி.
உண்மையில், கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது கனடா வங்கி.
அது, 2025, 26ஆம் ஆண்டு காலகட்டத்தில், வருடாந்திர மக்கள்தொகை வளர்ச்சி வீதம், மொத்தத்திலேயே 2 சதவிகிதம் மட்டுமே குறையும் என்று கூறியுள்ளது.
மார்ச் மாதம் கனடா அரசு அறிவித்ததற்கு மாறாக, ஏப்ரல் மாத துவக்கத்தில் கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 6.8 சதவிகிதமாக இருந்ததாக கூறும் கனடா வங்கி, அந்த வீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஆகவே, அரசு அறிவித்த 5 சதவிகிதத்தை எட்ட கூடுதல் காலம் பிடிக்கும் என்றும் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
இந்த, கனடாவில் தற்காலிகமாக வாழும் வெளிநாட்டவர்கள் அல்லது non-permanent residents என்பது, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் அகதிகளைக் குறிக்கும்.