Reading Time: < 1 minute
கனடா- அமெரிக்க எல்லையை மூடுவதை நீடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தற்போதைய கனடா- அமெரிக்க எல்லை மூடல் ஒப்பந்தம் காலாவதியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஒவ்வொரு மாதமும் எல்லைகளை நாங்கள் அனைவருக்கும் நீடிக்க முடிந்தது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மற்றும் அந்த விவாதங்கள் இப்போது அமெரிக்காவுடன் நடந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் எல்லையை மூடுவதற்கான காலக்கெடு ஜூலை 21ஆம் திகதி வரை உள்ளது’ என கூறினார்.
எனினும், கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அத்தியவசிய வர்த்தகம் மற்றும் அவசரகால பொது சுகாதார நோக்கங்களுக்காக பயணத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.