Reading Time: < 1 minute

அமெரிக்காவுக்கும் கனடாவுக்குமிடையில் நிலவும் பதற்றத்தைக் குறைக்க ரகசிய ஆஃபர் ஒன்றை ட்ரம்புக்கு அளிக்க மன்னர் சார்லஸ் திட்டம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே கனடாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார்.

கனடா மீது 25 சதவிகித வரிவிதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட ட்ரம்ப், கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் வரிவிதிப்புகள் எதுவும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

ஆனால், கனடா வெறும் ஒரு வட அமெரிக்க நாடு அல்ல. அது, ஒரு காமன்வெல்த் நாடு. அதுவும், பிரித்தானிய மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் நாடு.

ஆகவே, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது என்பது, பிரித்தானியாவின் கீழிருக்கும் ஒரு நாட்டை அதனிடமிருந்து பறிப்பது போன்றதாகும், அது எளிதான விடயமும் அல்ல!

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வர அழைப்பு விடுத்துள்ளார் மன்னர் சார்லஸ்.

அப்படி ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு வரும்போது, கனடா பிரச்சினையை தீர்க்கும் வகையில் ட்ரம்புக்கு மன்னர் சார்லஸ் ஆஃபர் ஒன்றை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், அமெரிக்காவை காமன்வெல்த் அமைப்பில் இணையுமாறு மன்னர் சார்லஸ் கேட்டுக்கொள்ள இருக்கிறார்.

அப்படி அமெரிக்கா காமன்வெல்த் அமைப்பில் இணைந்துவிட்டால், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டுவிடும்.

பிரித்தானியா மீது அன்பும், ராஜ குடும்பம் மீது மரியாதையும் கொண்ட ட்ரம்ப், அந்த உறவால் நன்மை ஏற்படுவதையே விரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக, காமன்வெல்த் அமைப்பில் அமெரிக்கா இனையும்போது, உறுப்பு நாடுகள் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கும் நாடுகளாக இருக்கவேண்டும் என்பதால், அமெரிக்காவுக்கும் அதன் சக நாடான கனடாவுக்கும் இடையிலான பிளவு தீரும் என எதிர்பார்க்கப்படுவதாலேயே இந்த திட்டத்தை மன்னர் சார்லஸ் முன்வைத்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.