கனடா மற்றும் அமெரிக்கா வில் 3 பில்லியனுக்கும் குறைவான பறவைகளே உள்ளதாக, அதிர்ச்சி ஆய்வுத் தகவலொன்று வெளியாகியுள்ளது.
புதிதாக மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆய்வு நடவடிக்கையின் பின்னரே, இந்த அதிர்ச்சி ஆய்வுத் தகவல் வெளிவந்துள்ளது.
1970ஆம் ஆண்டுக்குப் பின்னர், வட அமெரிக்காவில் 29 சதவீதமான பறவைகள் அழிந்துள்ளதாக, குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிய நாடுகளிலும் இதே நிலைமை நிலவுவதாக இந்த அறிக்கையில், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தோனேசியாவில் கூடுகளில் அடைத்து வளர்க்கப்படுகின்ற பறவைகளின் எண்ணிக்கையை காட்டிலும், வனங்களில் வசிக்கின்ற பறவைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது
‘பரவலான சுற்று சூழலின் நெருக்கடியே இதுவென’ இந்த மாபெரும் அழிவை விஞ்ஞானிகள் வர்ணிக்கின்றனர்.
நான்கு பறவை இனங்களில் ஒன்று தங்களது வாழ்விடங்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல, சுயாதீனமான சான்றுகள் ஏராளமான பறவைகள் குறைக்கப்படுவதைக் காட்டுவதாக, குறித்த ஆய்வின் முதன்மை எழுத்தாளரும், கார்னெல் லேப் ஒஃப் ஆர்னிடாலஜி மற்றும் அமெரிக்க பறவை கன்சர்வேன்சியின் மூத்த விஞ்ஞானியுமான கென் ரோசன்பெர்க் கூறியுள்ளார்.