கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தொலைபேசி ஊடாக பிறிதொரு பெண்ணிடம் தொடர்பினை ஏற்படுத்தி கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கட்டம் கட்டமாக 30 இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண் தான் அச்சுவேலியை சேர்ந்தவர் என தொலைபேசியில் அடையாளப்படுத்தியிருக்கிறார்.
பெண்ணின் கைது
பணம் வாங்கிய போதும் கனடாவிற்கு அனுப்புவதற்கான எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை, இதனால் சந்தேக நபரான பெண்ணை பாதிக்கப்பட்ட பெண் கடுமையாக பேசியுள்ளார், இதனால் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அச்சுவேலி பிரதேசத்திற்கு சென்று அப்பெண்ணை விசாரித்த போது அவர் அந்த இடத்தை சேர்ந்தவர் இல்லை என தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு வழங்கப்பட்டநிலையில், தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையிலும் , வங்கி கணக்கு இலக்கத்தின் அடிப்படையிலும் விசாரணைகளை மேற்கொண்டு அப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தொழிலதிபரின் வழிகாட்டல்
அதன்பின்னர், கைது செய்யப்பட்ட பெண்ணின் வாங்கிக்கணக்கினை காவல்துறையினர் பரிசீலித்தபோது கோடிக்கணக்கிலான பணம் அந்த வங்கிக் கணக்கினூடாக பரிமாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் பின்னணியில் குவைத் நாட்டில் வசிக்கும் தொழிலதிபரின் வழிகாட்டல் இருந்துள்ளமையும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.