Reading Time: < 1 minute

சீனப் பிரஜைகள் அதிக எண்ணிக்கையில் கனடாவை நோக்கி படையெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அன்மையா வாரங்களில் அதிக சீன பிரஜைகள் கனடாவில் வந்தடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் கோவில் பெருந்தொற்று அலை தலை தூக்கி உள்ள நிலையில் இவ்வாறு சீனர்கள் கனடா நோக்கி வருகை தர தொடங்கியுள்ளனர்.

சீனாவில் கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் கடுமையான விதிகளை அமுல்படுத்தி வருகின்றது.

கனடாவில் குடியேறுவதற்கு அதிக எண்ணிக்கையிலான சீனர்கள் விண்ணப்பித்து வருவதாக கனேடிய அரசாங்க புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் அரசாங்கத்தினால் கோவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது விளைவாக சீனர்கள் கனடாவில் குடியேற முனைப்பு காட்டி வருவதாக குடிவரவு சட்டத்தரணி Ryan Rosenberg தெரிவிக்கின்றார்.

சீனாவில் தொடர்ச்சியாக அமுல்படுத்த வரும் முடக்க நிலைமைகளால் சீன மக்கள் தங்களது குடும்பங்களுடன் வேறு நாடுகளை குடியேறுவதற்கு நாட்டம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.