கடந்த ஆண்டு கனடாவை உலுக்கிய 24 மில்லியன் டொலர் கொள்ளைச் சம்பவத்துடன் தமிழர் ஒருவருக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படகின்றது.
ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 400 கிலோ கிராம் எடையுடை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயம் கொள்ளையிடப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தங்கம் விமான நிலைய களஞ்சியச் சாலையிலிருந்து மாயமானது.
இந்த சம்பவம் கனடாவை மட்டுமன்றி உலக அளவில் பெரும் அதிர்வலைகளை பிரம்டனை சேர்ந்த 35 வயதான பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆயுத கொள்ளை, கொள்ளைச் சூழ்ச்சித் திட்டத்திற்கு உதவியமை, பங்களிப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பிரசாத் பரமலிங்கம் மீது சுமத்தப்பட்டுள்ளது.
65 ஆயுதங்களை கொள்வனவு செய்ய பிரசாத் பரமரலிங்கம் நிதி உதவி வழங்கியதாக அமெரிக்க பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆயுதங்கள் புளொரிடா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியான 25 வயதான கிங் மெக்லேனே, ஆயுதங்களை கடத்திய வாகனத்தையும் செலுத்தியுள்ளார்.