கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் கடந்த 1990-2000 கால கட்டத்தில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போர்ட் கோக்விட்லாம் பகுதியில் பன்றி பண்ணை நடத்திய ராபர்ட் பிக்டன் (வயது 71) சட்ட விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக பொலிஸுக்கு முறைப்பாடு அளிக்கபட்டன.
இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சென்றபோது அவரது வீட்டில் உள்ள பிரிட்ஜில் ஒரு பெண்ணின் உடல் துண்டு, துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது 49 பெண்களை அவர் வெட்டிக்கொன்றதும், பின்னர் அவர்களது உடலை துண்டு, துண்டாக வெட்டி தனது பண்ணையில் உள்ள பன்றிகளுக்கு இரையாக போட்டதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதுதொடர்பான வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நிலையில் வான்கூவரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ராபர்ட்டுக்கும், சிறையில் உள்ள சக கைதிகளுக்கும் இடையே கடந்த மாதம் 19-ம் திகதி மோதல் ஏற்பட்டது. அப்போது கைதிகள் பலர் அவரை சரமாரியாக தாக்கினர்.