Reading Time: < 1 minute

கனடாவில் ஒமிக்ரோன் திரிபு பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்நாட்டுக்கான பயணத்தை தவிர்க்குமாறு தனது பிரஜைகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

கனடாவிற்கான பயண ஆலோசனை நிலையை 4 ஆம் எச்சரிக்கை நிலைக்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) உயர்த்தியுள்ளது.

உலகளவில் இதுவரை 80 நாடுகளை நான்காம் நிலை எச்சரிக்கை பட்டியலில் அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது.

சுமார் இரண்டு வருடங்களின் பின் கடந்த நவம்பரில் கனடா மற்றும் மெக்ஸிக்கோ உடனான தனது தரை வழி எல்லைகளை முழுமையாகத் தடுப்பூசி போட்ட பயணிகளுக்காக அமெரிக்கா திறந்தது. அத்துடன், மார்ச் 2020-இல் விதிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற பயணிகளுக்கான பயணத் தடையும் நீக்கப்பட்டது.

இந்நிலையில் கனடாவில் கொவிட் தொற்று நோய் பாதிப்பு மற்றும் மருத்துவமனை சேர்க்கைகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் கனடா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது பிரஜைகளை எச்சரித்துள்ளது.