கனடாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்று கூறியுள்ளார் கனடாவில் புலம்பெயர்தல் துறை அமைச்சர்.
கனடாவுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்று கனடாவில் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser கூறியுள்ளார்.
எதனால் கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்பதையும் விளக்கியுள்ளார் அவர்.
கனடாவிலுள்ள தொழில் நிறுவனங்களில் பணியாளர் தட்டுப்பாடு தொடரும் நிலையில், தொழில்துறை நிறுவனங்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசின் உதவியை கோரியுள்ளன.
ஆக, பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள கூடுதல் ஆட்கள் தேவை.
இரண்டாவதாக, கனடாவில் பிறப்பு வீதம், அதாவது கனடாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை குறைந்துவருகிறது. ஆகவே, மக்கள்தொகையை சீர் செய்யவேண்டுமானால், வெளிநாடுகளிலிருந்து ஆட்களை கொண்டுவந்தே ஆகவேண்டும். அது புலம்பெயர்தல் இல்லாமல் சாத்தியமில்லை என்கிறார் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Sean Fraser.
மாற்றுக்கருத்துக்களும் எழுந்துள்ளன
ஆனால், இப்படி கூடுதல் புலம்பெயர்ந்தோரைக் கனடாவுக்குக் கொண்டு வந்தால், அவர்களுக்கு குடியிருக்க வீடு தேவைப்படும், மருத்துவமனைகளுக்கு கூடுதல் அழுத்தம் உருவாகும் என்கிறார் கனேடிய புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அலுவலக முன்னாள் உயர் அலுவலரான Andrew Griffith என்பவர்.
புலம்பெயர்ந்தோருக்கு குடியிருக்க இடம், மருத்துவ அமைப்பின் மீது அவர்கள் ஏற்படுத்த இருக்கும் அழுத்தம் ஆகிய விடயங்கள் குறித்து மதிப்பீடு எதுவும் செய்யப்பட்டதுபோல தெரியவில்லை என்கிறார் அவர்.