Reading Time: < 1 minute

கல்வி கற்பதற்காக, தங்கள் குடும்பத்தின் விவசாய நிலத்தை விற்று கனடா சென்ற ஒரு இளம்பெண் தொலைபேசியில் தன் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே நிலைகுலைந்து சரிந்தார்.

நவ்தீப் கௌர் (Navdeep Kaur 22) என்னும் இளம்பெண், கனடாவில் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்தார்.

இந்த மாதத் துவக்கத்தில், இந்தியாவிலிருக்கும் தன் தந்தையான குர்பிரீத் சிங்கிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தபோதே, திடீரென நிலைகுலைந்து சரிந்துள்ளார் நவ்தீப்.

உடனடியாக பிராம்ப்டனிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நவ்தீப்பைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூளையில் கட்டி ஒன்று உள்ளதாகவும், அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

அதன்படி அறுவை சிகிச்சை செய்யப்பட, அபாய கட்டத்தைத் தாண்டிய நிலையிலும், வென்டிலேட்டரில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது நவ்தீப்புக்கு.

ஆனால், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக, அவரது உடல் நிலை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே செல்ல, இம்மாதம் 19ஆம் திகதி நவ்தீப்புக்கு அளிக்கப்பட்டுவந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது.

விவசாய நிலத்தை விற்று 35 லட்ச ரூபாய் செலவு செய்து மகளை கனடாவுக்கு கல்வி கற்க அனுப்பிய நிலையில், மகள் உயிரிழந்த செய்தி கேட்டு நவ்தீப் குடும்பம் கவலையில் ஆழ்ந்துள்ளது.

அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக அரசின் உதவியை நாடியுள்ளனர் நவ்தீப்பின் பெற்றோர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.