கனடாவில் கொரோனா Omicron மாறுபாட்டின் சமூக பரவல் காணப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் வேகமெடுக்கும் அபாயம் இருப்பதாகவும் நாட்டின் முதன்மை மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் மருத்துவர் Theresa Tam தெரிவிக்கையில், ஒன்ராறியோவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு காரணம் ஓமிக்ரான் மாறுபாடு என சுட்டிக்காட்டியுள்ள அவர், புதிய ஓமிக்ரான் மாறுபாடானது வேகமாக பரவும் சாத்தியம் அதிகம் எனவும், சமூக பரவலுக்கு அது வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மத்தியில் நாளுக்கு 12,000 பேர்கள் வரையில் கொரோனா பாதிப்புக்கு இலக்காகும் சூழல் கனடாவில் ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தற்போதை சூழல் தொடர்பில் கவலை கொண்டுள்ளதாக கூறியுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.
மட்டுமின்றி, அனைவரும் இரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்துங்கள் என குறிப்பிட்டுள்ள ட்ரூடோ, பூஸ்டர் தடுப்பூசியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும், குறிப்பிட்ட வயதுடையவர்கள் முன்பதிவு செய்துகொள்ளவும் கேட்டுக்கொண்டார்.
கனடாவில் சுகாதாரத்துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் எனவும் மருத்துவர் Theresa Tam சுட்டிக்காட்டியுள்ளார்.