Reading Time: < 1 minute

கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த 99 வயதான மூதாட்டியொருவர் பீட்ஸா தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

99 வயதில் அனைவரும் ஓய்வு பெற்றுக்கொண்டு வீட்டில் இருப்பார்கள் என்ற போதிலும், இந்த மூதாட்டி சற்றே வித்தியாசமானவர்.

என்டானிட்டோ லொமொனாகோ (Antoinetta Lomonaco) என்ற 99 வயதான மூதாட்டியே இந்த வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தி வருகினறார்.

குடும்ப ரெஸ்டூரன்டில் பீட்ஸா தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

நூறு வயதினை அண்மித்துள்ள குறித்த பெண் வாரத்திற்கு மூன்று நாட்கள் பணியாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 11ம் திகதி இந்த மூதாட்டி 100ம் பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

65 வயதில் ஓய்வு பெற்றுக்கொண்ட மறுதி தினமே இந்த மூதாட்டி சுமார் 35 வருடங்களாக பீட்ஸா தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

மிகவும் ஆர்வமாக இந்த மூதாட்டி பீட்ஸா தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.