கனடாவில் போலீஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு தமது தொலைக்காட்சியில் அலைவரிசைகளை பார்க்க முடியவில்லை என ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
போலீஸ் அவசர முறைப்பாட்டு சேவைக்கு பல்வேறு வினோதமான அழைப்புகள் கிடைக்க பெறுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பொருத்தமற்ற இவ்வாறான அவசர அழைப்புகளினால் அத்தியாவசியமான தேவையுடையவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் 911 என்ற போலீஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு நபர் ஒருவர் அழைப்பினை ஏற்படுத்தி தமது தொலைக்காட்சியில் அலை வரிசைகள் எதனையும் பார்க்க முடியவில்லை என முறைப்பாடு செய்துள்ளார்.
போலீஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெறும் ஒவ்வொரு அழைப்பும் மிகவும் முக்கியமானவை எனவும் ஒவ்வொரு செகண்ட்களும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை எனவும் போலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதனால் மக்கள் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. பீல் பிராந்திய போலீஸ் பிரிவின் பிரதானி நிஷான் துரையப்பா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் அலை வரிசைகள் செயற்படவில்லை என எடுக்க வேண்டிய இலக்கத்திற்கு பதிலாக தற்செயலாக இவ்வாறு எண்களை மாற்றி அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு அழைப்பு ஏற்படுத்தப்படுவதனால் அவசர தேவை உடையவர்கள் பாதிக்கப்படுவார் என நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.