Reading Time: < 1 minute

கனடாவில் சுமார் 9 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருளுடன் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யோர்க் பிராந்திய பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இரண்டு பேர் பாரியளவிலான போதைப் பொருளை வைத்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ரிச்மன்ட்ஹில் பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 8.9 மில்லியன் டொலர் பெறுமதியான கொக்பேய்ன் போதைப் பொருள், 260,000 டொலர் பணம் மற்றும் ஒரு லட்சம் டொலர் பெறுமதியான ஆடம்பர ஆடைகள் என்பன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

30 வயதான அலிஷா கொக்கோ மற்றும் 39 வயதான வில்லியம் புங்க் என்ற இரண்டு நபர்கள் இந்த போதைப் பொருள் கடத்தல் குற்ச்சாட்ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.